கனடாவின் சர்ச்சைக்குரிய மரீன்லேண்ட் கேளிக்கைப் பூங்கா தன் வசமுள்ள பெலுகா திமிங்கிலங்களை அமெரிக்காவிடம் விற்பதற்கு அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
சீனாவுக்கு அவற்றை ஏற்றுமதி செய்வதற்கான பரிந்துரை நிராகரிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவிடம் விற்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. நயாகரா நீர்வீழ்ச்சி அருகே அமைந்துள்ள பூங்கா இப்போது மூடப்பட்டிருக்கிறது.
2019இலிருந்து அங்கு 19 திமிங்கிலங்கள் உட்பட 20 விலங்குகள் மடிந்ததால் அந்தப் பூங்கா குறைகூறல்களுக்கு ஆளானது.
திமிங்கிலங்களை ஏற்றுமதி செய்யும் திட்டம் நிறைவேறத் தவறினால் அவை கருணைக் கொலை செய்யப்படலாம் என்று மரீண்லேண்ட் எச்சரித்துள்ளது.
அதேவேளை திமிங்கிலங்களைப் பார்த்துக்கொள்ளப் போதுமான வளங்கள் இல்லை என்று பூங்கா இதற்கு முன்னர் கூறியிருந்தது. இந்நிலையில் ஏற்றுமதி அனுமதிக்கான புதிய விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதாகக் கனடாவின் மீன்வளத் துறை அமைச்சு தெரிவித்தது.
திமிங்கிலங்கள் இயற்கையான காரணங்களால் மடிந்ததாகப் பூங்கா கூறியிருந்த நிலையில் விலங்குநல அமைப்பு விசாரணை மேற்கொண்டுளமை குறிப்பிடத்தக்கது.


