எதிர்க்கட்சிகளினால் ஏற்படுத்தப்பட்ட குழப்பம் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஆறாம் ஆண்டு புதிய கல்வி சீர்திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி இன்று காலை நாவலப்பிட்டி நகரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக அனைத்து, ஆறாம் தர வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களும் ஒன்றிணைவோம், என்ற தொனிப்பொருளின் கீழ், கல்வி மறு சீரமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த அமைதிப் போராட்டம் நடைபெற்றது.
இதில் ஆறாம் தர மாணவர்களின் பெற்றோர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.


