விவசாயம் தொடர்பில் புதிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட கோட்டாபய அரசுக்கு ஏற்பட்ட நிலை, கல்வி தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் இந்த அரசுக்கு ஏற்படும் நிலை உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் பாதையில் தற்போதைய அரசாங்கம் செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டார்.
அன்றைய அரசாங்கம் முன்னெடுத்த திட்டங்களை ஒத்ததாக தற்போதைய அரசாங்கமும் முன்னெடுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் எவ்வாறு விவசாயத்தை வைத்து முறையற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி ஆட்சியில் இருந்து விலகினார்களோ அதேபோன்று கல்வியின் ஊடாக இந்த அரசாங்கம் அதே பாதையில் நோக்கி செல்வது மிகத்தெளிவாக தெரிகிறது என்றும் அவர் கூறினார்.
பல்கலைக்கழக கட்டமைப்பிலும் இனவாதமாக அரசாங்கம் சில விடயங்களை முன்னெடுப்பதாகவும் அது தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடல் நடத்தியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


