டாக்டர் செந்தில் மோகன் நிர்வாகத்திலான ஸ்காபரோ MedCentre Health வருடாந்த மதிப்பளிப்பு வைபவம் கடந்த மாதம் 27ம் திகதி மார்க்கம் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. ஒன்ராறியோ மாகாண மூத்தோர் விவகார அமைச்சர் திரு. றேமன்ட் சோ முதன்மை விருந்தினராகப் பங்குபற்றி சிறப்புரையாற்றினார்.
இலங்கை மருத்துவக் கல்லூரியில் 1981ம் ஆண்டில் கல்வி கற்ற டாக்டர் செந்தில் மோகனின் சகபாடிகளான டாக்டர்கள் ஹர்சா மற்றும் ஜோ ஆகியோர் நிகழ்வில் சிறப்புரையாற்றினார்கள். மருத்துவமனையில் பணியாற்றும் சேவையாளர்கள் விருதுடன் சான்றுப் பட்டயம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். (ஒளிப்படங்கள்: என். சபீசன்)












