TamilsGuide

வலப்பனை அல்மா – லியங்வெல பாலம் விமானப்படையினரால் புனரமைப்பு

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட குருந்தோயா வட்டாரத்தில் அமைந்துள்ள அல்மா கிரேமண்ட் கிராமத்துப் பாலம், விமானப்படையினரின் பங்களிப்புடன் சீர்செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது.

அல்மா முதல் லியங்வெல கிராமங்களுக்கு இடையிலான பிரதான போக்குவரத்துப் பாதையில் அமைந்துள்ள இப்பாலம் பல தசாப்தங்களாகப் புனரமைக்கப்படாமல் காணப்பட்டது.

அண்மைய அனர்த்தங்களால் இப்பாலம் பலத்த சேதமடைந்திருந்த நிலையில், பிரதேச சபை உறுப்பினர் மு. ராம்கி அவர்களின் ஒருங்கிணைப்பில் விமானப்படையினரின் ஒத்துழைப்பு கோரப்பட்டது.

விமானப்படையினரின் துரித கதியிலான பணிகளினால் பாலம் சீர்செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்பணியில் ஈடுபட்ட விமானப்படை வீரர்களுக்கு மக்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு, இப்பணியை ஒருங்கிணைத்த பிரதேச சபை உறுப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்தனர்.
 

Leave a comment

Comment