TamilsGuide

ஆஸ்கார் விருது - டைட்டானிக் சாதனையை முறியடித்த சின்னர்ஸ்

திரையுலகில் சர்வதேச அளவில் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16-ம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும்.

இதற்கிடையே, நடப்பு ஆண்டில் 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் 24 பிரிவுகளில் வழங்கப்படும் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் சமீபத்தில் வெளியானது.

இதில் 16 பிரிவுகளில் நாமினேட் ஆகி ஆஸ்கார் வரலாற்றிலேயே அதிக பிரிவுகளில் நாமினேட் ஆன படமாக சின்னர்ஸ் (Sinners) திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் ரையன் கூக்லர் இயக்கிய 'சின்னர்ஸ்' திரைப்படம், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒப்பனை அலங்காரம், சிறந்த ஒலி, சிறந்த விஎப்எக்ஸ், சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் மற்றும் சிறந்த நடிகர் என 16 ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்போட்டியில் போட்டியிட தேர்வாகி உள்ளது.

முன்னதாக ஆல் அபவுட் ஈவ், டைட்டானிக் மற்றும் லாலா லேண்ட் ஆகிய படங்களின் 14 பிரிவுகளில் போட்டியில் இருந்த நிலையில் சின்னர்ஸ் அந்த சாதனையை முறியடித்துள்ளது.

சின்னர்ஸ் படத்திற்கு அடுத்தபடியாக இந்த வருட ஆஸ்காரில் லியனார்டோ டி காப்ரியோ நடித்த 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' (One Battle After Another) திரைப்படம் 13 பிரிவுகளில் இறுதிப்போட்டிக்கு நாமினேட் ஆகி உள்ளது.

அடுத்ததாக 'மார்ட்டி சுப்ரீம்', 'சென்டிமென்டல் வேல்யூ' மற்றும் 'ப்ராங்கன்ஸ்டைன்' ஆகிய படங்கள் தலா 9 பரிந்துரைகளைப் பெற்றுள்ளன.

F1, தி சீக்ரெட் ஏஜென்ட், டிரைன் ட்ரீம்ஸ், ஹாம்நெட், பிராங்கண்ஸ்டைன், பிகோனியா உள்ளிட்ட படங்களும் இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

அதேநேரம் இந்தியாவின் சார்பில் ரேஸில் இருந்த ஜான்வி கபூரின் ஹோம்பவுண்ட் திரைப்படம் இறுதிப்போட்டிக்கு தேர்வாகாமல் ஏமாற்றம் அளித்தது. 
 

Leave a comment

Comment