TamilsGuide

குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலய வீதியின் 2ம் குறுக்கு வீதி கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் பணி ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியின் 2ம் குறுக்கு வீதி 05 மில்லியன் செலவில் கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் பணி தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் இன்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மிக நீண்ட நாட்களாக கவனிப்பார் அற்ற நிலையில் காணப்பட்டது.பின்னர் தவிசாளரிடம் கிராம மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த வீதி புனரமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது பிரதேச சபை உறுப்பினர் பரணிதரன் மற்றும் கிராம பொது நிர்வாக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment

Comment