யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
ஆழியவளை பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கைக்குண்டு காணப்படுவதாக , பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் , அதனை பாதுகாப்பான முறையில் அகற்றியுள்ளனர்.
கைக்குண்டு மீட்கப்பட்டது தொடர்பில் கிளிநொச்சி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் ,நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


