மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கான இடைக்கால நிர்வாக சபை விடயங்களில் வக்பு சபையானது அரசியல்வாதிகளது அல்லக்கையாக செயற்பட கூடாது என வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.எம் அஸீம் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் தற்காலிகமாக இடம்பெற்றுள்ள இடைக்கால நிர்வாக சபை சம்பந்தமாக விசேட ஊடக சந்திப்பு ஒன்று நேற்று சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் இரவு நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
பொலிஸாரை கூட ஜனநாயக ரீதியாக இயங்க விடாமல் நாடாளுமன்ற உறுப்பினர் மிரட்டுகின்றார்.எனவே தான் அனுர அரசாங்கத்திடம் ஒரு வேண்டுகோள் ஒன்றினை முன்வைக்கின்றோம். இந்த அரசாங்கத்தில் தூரநோக்கின்றி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மக்களை குழப்பகரமான நிலைக்கு இட்டுச் செல்ல எத்தனிக்கின்றார்.எனவே எங்களது பிரதேச செயலாளரினால் வக்பு சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெயர் பட்டியலை ஏற்றுக் கொண்டிருந்தால் மக்கள் குழப்பமடைய மாட்டார்கள்.
ஆனால் இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வக்பு சபையை அச்சுறுத்தி எமது மக்களை ஒரு குழப்பகரமான நிலைக்கு இட்டுச் செல்கின்றார்.இவ்வாறான விடயங்களை நாங்கள் கண்டிக்கின்றோம்.வக்பு சபையானது அரசியல்வாதிகளது அல்லக்கையாக செயற்பட கூடாது என குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் சந்திப்பில் வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பின் செயலாளர் ஏ.எம்.றம்சான், வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பின் உறுப்பினரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான யு.எல் றிஸ்வி ஆகியோரும் உடனிருந்தனர்.


