TamilsGuide

1 கிலோ 501 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

1 கிலோ 501 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை மாதம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று  அதிகாலை மாதம்பிட்டிய, ‘சத்ஹிரு செவன’ தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றில் இருந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்களை பொலிஸார் சோதனையிட்ட போதே, அவர்களிடமிருந்து இந்த ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டிய மற்றும் கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்த 24 மற்றும் 29 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு சந்தேக நபரிடம் இருந்த பையொன்றிலிருந்து ஐஸ் போதைப்பொருள், இலத்திரனியல் தராசு மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 18,000 ரூபா பணம் என்பனவும், மற்றைய சந்தேக நபரிடமிருந்து மேலும் 201 கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மாதம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment