மக்களைப் பாதிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்
அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வகையில், மக்களைப் பாதிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஆயுர்வேத உற்பத்திகள் மற்றும் சில சிகிச்சை முறைகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை, நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்த முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், மக்கள் பாதிக்கப்படும் வகையில் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியதாக சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டம் நாட்டில் இல்லை என்றும், அவற்றை இயற்றுவதன் மூலம் இவ்வாறான நிலைமைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.


