அண்மைய வரலாற்றில் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் தொகை கடந்த 2025 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு திட்டத்தின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதற்காக இன்று (22) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டில் ஹெரோயின், கஞ்சா, ஐஸ், ஹாஷிஷ் மற்றும் கொக்கெய்ன் உள்ளிட்ட மொத்தம் 10,871 கிலோ கிராம் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
அதேநேரம், 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 23,692 கிலோ கிராம் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.


