TamilsGuide

16.5 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 165,200 வெளிநாட்டு சிகரெட் குச்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக 47 வயதான நபர் ஒருவர் வெல்லம்பிட்டி பகுதியில் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிகரெட் குச்சிகளின் பெறுமதியானது 16.52 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவம் மற்றும் ராஜகிரிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய நடவடிக்கையின் போது இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
 

Leave a comment

Comment