TamilsGuide

கிழக்கில் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு முடிவுக்கு வரவேண்டும் – அந்தனி சில் ராஜ்குமார்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய பணிப்பாளரை இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் 4 நாட்களாக   பணிப்பகிஸ்கரிப்பு  போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டு வருவது கண்டிக்கப்பட வேண்டும்.

அத்தோடு இந்த போராட்டத்தை நாளை  முடிவுக்கு  கொண்டுவர வேண்டும் இல்லாவிடில் காந்தி பூங்காவில் மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டமாக  வைத்திய பணிப்பாளர் காரியாலயத்தை முற்றுகையிடுவோம் என ஈ.பி.டி.பி கட்சி ஒருங்கிணைப்பாளர் அந்தனி சில் ராஜ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா ஊடக கற்கை நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட ஈ.பி.டிபி. கட்சியின் மட்டு ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார், மாவட்ட  அமைப்பாளர் எஸ்.சிவானந்தராஜா, அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ஆனந்தன் ஆகியோர் கூட்டாக இணைந்து இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment

Comment