இது ஒரு நடிகையைப் பற்றிய பதிவு மட்டும் அல்ல ! ஒரு நல்ல பண்பைப் பற்றிய பதிவு !
கே. ஆர்.விஜயாவை ஹீரோயினாக நடிக்க வைத்து, இயக்குனர் மாதவன் “முகூர்த்தநாள்” (1967) என்ற ஒரு படத்தை தயாரித்தார். மிகுந்த எதிர்பார்ப்போடு தயாரிக்கப்பட்ட படம்.
ஆனால் எதிர்பார்த்தது போல ஓடவில்லை.
ஏகப்பட்ட நஷ்டம்.
இந்த நேரத்தில் ஒரு நாள்
கே ஆர் விஜயாவின் வீடு தேடி சென்றார் இயக்குனர் மாதவன்.
வரவேற்றார் கே.ஆர்.விஜயா : “வாங்க சார், உட்காருங்க ..!”
உட்கார்ந்தார்.
சுடச்சுட காபி கொண்டு வந்து வைத்து விட்டு சென்றார் பணிப் பெண்.
புன்னகையுடன் கேஆர் விஜயா,
"சாப்பிடுங்க சார் !"
ஒன்றும் பேசாமல் காபி சாப்பிட்டுவிட்டு காலி கோப்பையை கீழே வைத்தார் இயக்குனர் மாதவன்.
அதன் பின்...
கைகளை துடைத்துக் கொண்டு, கையில் வைத்திருந்த பையில் இருந்து,
கட்டு கட்டாக பணத்தை எடுத்து அதை கே.ஆர்.விஜயாவின் கைகளில் கொடுத்தார்.
எதுவும் புரியாமல் கே ஆர் விஜயா, "என்ன சார் இது ?"
மாதவன் : "நான் தயாரித்த முகூர்த்த நாள் படத்துக்காக நாம ஏற்கனவே பேசிக்கொண்ட உங்களோட சம்பளப் பணம்."
கே ஆர் விஜயா தயக்கத்துடன், "சார், படம் சரியாக போகவில்லை என்று கேள்விப்பட்டேன்."
"உண்மைதான். ஆனாலும் படம் தயாரிக்க ஆரம்பிக்கும் முன்பே, ஒப்பந்தத்தில் நான் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கிறேனே !"
என சோகப் புன்னகையுடன் சொல்லிவிட்டு,
"நான் வருகிறேன்" என
தளர்வான நடையோடு தனது வீட்டுக்குப் புறப்படத் தயாரானார் மாதவன்.
“ஒரு நிமிஷம் இருங்க சார்” என்று சொன்ன கே.ஆர்.விஜயா, அத்தனை பணத்தையும் எடுத்துக் கொண்டு பூஜை அறைக்குச் சென்று, சாஸ்திரத்துக்கு ஒரு சிறு தொகையை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு,
மீதிப் பணம் முழுவதையும் அப்படியே இயக்குனர் மாதவனின் கைகளில் கொண்டு வந்து கொடுத்து விட்டு, கை எடுத்து வணங்கி, கண்களில் கண்ணீரோடு இப்படிச் சொன்னாராம் :
“சார்.. நான் அடிக்கடி சொல்வேனே... மறந்துட்டீங்களா..?
என்னால யாரும் நஷ்டப்படக் கூடாது. அந்த வாக்கை நான் ஒருநாளும் மறக்க மாட்டேன் சார்..!"
இப்படி சொல்லிவிட்டு
கே. ஆர். விஜயா பணத்தை திரும்பவும் இயக்குனர் மாதவன் கைகளில் கொடுக்க, பேச வார்த்தைகள் எதுவும் வராமல், கண்கள் கலங்க, பதிலுக்கு கை கூப்பி வணங்கி விட்டு, அங்கிருந்து புறப்பட்டார் மாதவன்.
ஆம். கே.ஆர்.விஜயா, தான் சொன்ன சொல்லை ஒருபோதும் மறந்தது இல்லை.
தன் வாழ்வில் ஒருவரையும் நஷ்டப்படுத்தியதும் இல்லை.
பிரசாந்த்!


