TamilsGuide

26ஆம் திகதியிலிருந்து நெல்கொள்வனவு ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் கே.டீ.லால்காந்த

வன்னி உட்பட வடக்கு கிழக்கெங்கும் பெரும்போக நெல்அறுவடை இடம்பெற்றுவரும்நிலையில் நெல்சந்தைப்படுத்தல் சபையினூடாக நெற்கொள்வனவை விரைந்து ஆரம்பிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதியிலிருந்துலிருந்து நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படுமென கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் அமைச்சின் அதிகாரிகளால் பதில் வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் இன்று கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்கள் உட்பட வடக்கு கிழக்குப்பகுதிகளில் தற்போது பெரும்பொக நெல் அறுவடை தொடங்கியுள்ளது.

இருப்பினும் இதுவரை நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படவில்லை என என்னிடம் விவசாயிகளால் முறையீடுகள் செய்யப்பட்டிருந்தன.

விவசாயிகளின் குறித்த முறையீட்டிற்கு அமைவாக நெல்சந்தைப்படுத்தல் சபையினூடாக விவசாயிகளிடமிருந்து விரைவாக நெல்லைக்கொள்வனவுசெய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு கடந்த செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தேன்.

அதன்தொடர்சியாக இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்திலும் நெல்சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவைத் துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியிருந்தேன்.

இந்திலையில் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து நெல்சந்தைப்படுத்தல் சபையினூடாக நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படுமென கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த அவர்களினாலும், அமைச்சின் அதிகாரிகளாலும் பதில் தரப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நெல்சந்தைப்படுதல் சபையினூடான நெற்கொள்வனவு தொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன – என்றார்.

Leave a comment

Comment