நிட்டம்புவ, பின்னகொல்ல தோட்டத்தில் 61 கிலோ விற்கும் அதிகமான கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை வைத்திருந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோனஹேன விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், STF அதிகாரிகள் நடத்திய நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கையின் போது, சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் 61 கிலோ கிராம் 838 கிராம் ஐஸ் போதைப்பொருளை கொண்டு சென்றபோது கைது செய்யப்பட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் ரூ. 900 மில்லியன் ஆகும்.
அதேநேரத்தில் முச்சக்கர வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகளில் சந்தேக நபர் தற்போது வெளிநாட்டில் உள்ள “துபாய் வருண்” மற்றும் மொஹமட் சித்திக் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நெருங்கிய நண்பர் என்றும் தெரியவந்துள்ளது.


