TamilsGuide

14 வயது சிறுவனை பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த மாமானர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுவன் ஒருவiர் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த சிறுவனின்  மாமானாரை நேற்று  கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவனின் தந்தையார் தாயார் பிரிந்து வாழ்ந்து வருவதுடன் தந்தையார் வெளிநாட்டில் இருந்துவரும் நிலையில் தந்தையாரின் உறவினரான மாமாவீட்டிற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குறித்த சிறுவன் உட்பட அவரது சகோதர்கள் சென்று தந்தையாருடன் தொலைபேசியில் பேசி வருவதுடன் அவர்களுக்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா பணத்தை மாமானார் ஊடாக தந்தையார் அனுப்பி அதனை வழங்கி வருகின்றார்.

இதன் காரணமாக குறித்த சிறுவன் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம்  24 ம் திகதி மாமனார் வீட்டிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் மாமானார் சிறுவனின் அந்தரங்க உறுப்பை தொட்டு பாலியல் சேட்டை செய்ய முயற்சித்துள்ளார். இதனை தொடர்ந்து  மீண்டும் கடந்த 27 ம்திகதி மாமானார் வீட்டுக்கு சென்ற சிறுவனிடம் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்துள்ளார்.

இது தொடர்பாக குறித்த சிறுவன் தாயாரிடம் தெரிவித்ததையடுத்து கடந்த டிசம்பர் 30 ம் திகதி 1990 என்ன அவசர சேவைக்கு முறைப்பாடு செய்தனர் இதனையடுத்து பொலிசார் குறித்த சிறுவனிடம் முறைப்பாட்டை பதிவு செய்து அவரை வைத்தியசாலையில் பரிசேதனைக்காக அனுமதித்தனர்

இந்த நிலையில் தலைமறைவாகியிருந்த குறித்த மாமானாரை தேடிவந்த நிலையில் நேற்று  கைது செய்துள்ள பொலிசார் , அவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிகக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
 

Leave a comment

Comment