TamilsGuide

முன்பதிவில் வசூலை வாரிக்குவிக்கும் மங்காத்தா.. 

தமிழ் சினிமாவில் புதிய படங்களுக்கு நிகராக உச்ச நட்சத்திரங்களின் ரீ ரிலீஸ் படங்கள் வசூல் செய்து வருகின்றன. விஜய்யின் கில்லி, சச்சின், ரஜினியின் படையப்பா ஆகிய படங்கள் வசூலில் பட்டையை கிளப்பின.

இதை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த மங்காத்தா படம் வருகிற 23ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

இப்படத்தின் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில், புக்கிங் அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உலகளவில் இதுவரை நடந்த முன்பதிவில் மங்காத்தா படம் ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது.

இது வெறும் ஆரம்பம் மட்டும்தான் ரிலீஸுக்கு பின் மாபெரும் வசூல் வேட்டை காத்திருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பது முன்பதிவிலேயே தெளிவாக தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் மங்காத்தா ரீ ரிலீஸ் எவ்வளவு கோடிகளை வசூல் செய்து சாதனை படைக்கப்போகிறது என்பதை.

Leave a comment

Comment