தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் பராசக்தி. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
ரவி மோகன் முதல் முறையாக இப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
மேலும் அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்து பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், 10 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள பராசக்தி உலகளவில் இதுவரை ரூ. 85 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


