TamilsGuide

ஜப்பான் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த பிரதமர் சனே தகைச்சி முடிவு

ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி அந்நாட்டின் பாராளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையை கலைத்துவிட்டு பிப்ரவரி 8 அன்று பொதுத்தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளார்.

கடந்த அக்டோபரில் பிரதமராகப் பதவியேற்ற சனே தகைச்சிக்கு மக்களிடையே 70% ஆதரவு உள்ளது. இவரே ஜப்பானின் முதல் பெண் பிரதமர் ஆவார்.

பாராளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மையே உள்ளது. தனது பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை எதிர்ப்பின்றி செயல்படுத்தவும் தனது செல்வாக்கை நிரூபிக்கவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதற்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நேரத்தில் தேர்தலை அறிவிப்பது நாட்டைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

ஆனால், புதிய அரசு அமைந்த பிறகு உடனடியாக பட்ஜெட் நிறைவேற்றப்படும் எனப் பிரதமர் உறுதியளித்துள்ளார். 
 

Leave a comment

Comment