TamilsGuide

மன்னார் மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்த சூரியப் பொங்கல் விழா

மன்னார் மாவட்டச் செயலக அலுவலர்கள் ஏற்பாடு செய்த  தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான சூரியப் பொங்கல் விழா மற்றும் உழவர் கௌரவிப்பும் இன்று காலை மன்னார் மாவட்ட செயலகத்தில்  அரசாங்க அதிபர் . க. கனகேஸ்வரன்  தலைமையில் நடைபெற்றது.

இதன் போது அரசாங்க அதிபர் மற்றும் அலுவலர்கள் இணைந்து பொங்கல் பெங்கினர்.
அதனை தொடர்ந்து   நடன நிகழ்வுகள் அரங்கேறியது.   தொடர்ந்து உழவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை மதிக்கும் வகையில் உழவர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேசச்  செயலாளர் பிரிவுகளில் இருந்து ஒருவர் வீதம் 5 உழவர்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மேலும்  தேசிய மட்டத்தில் சிறப்பான சாதனைகளைப் படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர் ,பிரதம உள்ளக கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதுடன் மாவட்ட செயலகத்தின்  உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 

Leave a comment

Comment