TamilsGuide

அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை - அத்துமீறினால் பதிலடி நிச்சயம்

ஈரான் மீது அத்துமீறினால் அதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என அந்நாடு எச்சரித்துள்ளது. ஈரானை ஆட்சி செய்யும் கமேனிக்கு எதிராக அந்நாட்டில் போராட்டம் வெடித்துள்ளது.

இதில் 5 ஆயிரம் பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறைகளை ஏவினால் அமெரிக்க ராணுவம் தலையிடும் என ட்ரம்ப் எச்சரித்து இருந்தார்.

இதனிடையே, அமெரிக்க தளங்களை ஈரான் குறிவைப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனையடுத்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் கூறியதாவது: அமெரிக்க படை தளங்கள் மீது நாங்கள் குறிவைப்பதாக அந்நாடு சொல்வது பொய்.

மேற்கு ஆசியாவில் பதற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இதனை அந்நாடு செய்கிறது. ஈரானின் இறையாண்மையையும், ராணுவ மற்றும் பாதுகாப்பு வசதிகளை பாதுகாப்பதில் ஆயுதப்படைகள் உறுதியாக உள்ளன.

இதனை மீறி ஏதாவது அத்துமீறலில் ஈடுபட்டால், அதற்கு ஈரான் கடுமையான பதிலடி கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். 
 

Leave a comment

Comment