தெற்கு ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விஒஅத்தில் , 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்ட் தெரிவித்தார்.
கோர்டோபா நகருக்கு அருகிலுள்ள அடமுஸ் நகருக்கு அருகில், மலக்காவிலிருந்து மாட்ரிட் நோக்கிச் சென்ற அதிவேக ரயில் தடம் புரண்டு மற்றொரு பாதையில் சென்றுள்ளது.
இதன்போது, தடம் புரண்ட ரயில் மாட்ரிட்டில் இருந்து ஹுல்வாவுக்குச் சென்று கொண்டிருந்த எதிரே வந்த ரயிலில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில் வலையமைப்பு இயக்குனர் அடிஃப் தெரிவித்தார்.
இந்த விபத்தில் 73 பேர் காயமடைந்ததாக ஆண்டலூசிய அவசர சேவைகள் மையம் தெரிவித்தது. கடந்து ஆண்டு மே மாதம் புணரமைக்கப்பட்ட மார்க்கத்தில் ரயில் தடம்புரண்டுள்ளது இந்த சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
குறைந்தது ஒரு மாதத்திற்குள் என்ன நடந்தது என்பதை விசாரணையில் கண்டறிய முடியாது என கூறப்படுகிறது. நாடு இரவு பாரிய துக்கத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்தார்.
மலகாவிலிருந்து பயணத்தை மேற்கொண்ட தடம் புரண்ட Iryo தனியார் ரயில் நிறுவனத்துக்கு சொந்தமான ரயிலில் சுமார் 300 பயணிகள் இருந்ததாகவும், Renfe நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு ரயிலில் சுமார் 100 பயணிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டலூசிய அவசர சேவைகள் மையம் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில்,
விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் தாங்கள் உயிரோடு இருப்பதை சமூக வலைதளங்களில் பதிவிடுமாறு கேட்டுக்கொண்டது. ரயிலின் சிதைந்த பாகங்கள், உயிர் பிழைத்தவர்களையும் உடல்களையும் மீட்பதை கடினமாக்கியுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.


