TamilsGuide

இந்தி சினிமாவில் பாகுபாடு - சர்ச்சைகளுக்கு பதில் அளித்து வீடியோ வெளியிட்ட ஏ.ஆர். ரகுமான்

இந்தி திரைப்படத் துறையில் தனக்கு பாகுபாடு கட்டப்பட்டதாக அண்மையில் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் பேசு பொருளானது.

அண்மையில் கொடுத்த பெட்டியின் பேசிய ஏ.ஆர்.ரகுமான், "சாவா பிரிவினையை பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், 'வீரத்தை காட்டுவது'தான் அப்படத்தின் மையக்கருவாக நான் பார்க்கிறேன்.

கடந்த 8 வருடங்களாக இந்தி திரைப்படத் துறையில் இசை அமைக்கும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைக்கவில்லை. இசைத் துறை, இனி இசைக்கலைஞர்கள் மற்றும் இயக்குநர்களின் கைகளில் இல்லை. கார்ப்பரேட் கைகளில் உள்ளது. படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதால் பாகுபாடு நிலவுகிறது. எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு மதரீதியான விஷயமும் காரணமாக இருக்கலாம். இது என் முகத்துக்கு நேராக நடக்கவில்லை என்றாலும், அது போன்ற விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துக்கு பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், "இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "இசை என்பது கலாசாரத்துடன் இணைவதற்கும், அதைக் கொண்டாடுவதற்கும், மரியாதை செலுத்துவதற்கும் நான் பயன்படுத்தி வரும் ஒரு வழி. இந்தியா எப்போதுமே என் வீடு, என் ஆசான். இசை மீதான அர்ப்பணிப்பு மூலம் இந்தியாவுக்கு நான் மிகவும் நன்றிகடன் பட்டுள்ளேன்

சில நேரங்களில் நோக்கங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படலாம் என்பதை நான் இப்போது புரிந்துகொண்டேன். இசையின் மூலம் சேவை செய்ய வேண்டும் என்பதே எப்போதும் என் நோக்கமாக இருந்து வருகிறது. யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. என் எண்ணம் புரிந்துகொள்ளப்படும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment