TamilsGuide

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

திருகோணமலை பிரட்டரிக் கோட்டை வாயிலில் உள்ள பிள்ளையார் கோவிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படுவதாக இன்றையதினம் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழல் எதிர்ப்பு குடிமக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் குறித்த சங்கத்தின் தலைவர் ஜமுனி கமந்த துஷாரா இந்த முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தார்.

சட்டமானது அனைவருக்கும் சமனானதாக இருக்கவேண்டும் எனவும் கரையோரத்தில் புத்தர் சிலை வைத்ததாக குறிப்பிட்டு 4 பெளத்த மதகுருக்கள் அடங்கலாக 9 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஏன் இந்த காவல்துறை இவ்வாறான கட்டுமானங்கள் குறித்து பாராமுகமாக இருக்கிறது என தெரிவித்து இன்றைய தினம் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்ததாகவும், நாளைய தினம் தொல்லியல் திணைக்களம் மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களத்திலும் தாம் முறையிட இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
 

Leave a comment

Comment