மனைவியைக் கொன்ற நிமலராஜா லண்டனில் நீதிமன்றில் கூறிய பரபரப்பு வாக்குமூலம் இதோ!!
♦ பிருத்தானியாவின் லிவர்பபூல் பகுதியில் இலங்கை யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியா முகத்தான்குளம் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட நிலானி நிமலராஜா எனும் 44 வயதான 3 பெண் பிள்ளகைளின் தாயான பெண் பூட்டில் எனும் பகுதியில் வைத்து 47 வயதான கணவன் மதியாபரணம் நிமலராஜாவால் 20.06.2025 மாலை 5.05Pm அன்று குத்திக் கொலை செய்யப்பட்டார்.
♦ அந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. மனைவியைக் கொன்ற நிமலராஜாவுக்கு 29 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற வழக்கின் போது இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
♦ நிமலராஜனுக்கு எதிராக வாதாடிய அரசதரப்பு சட்டத்தரணி கூறிய தகவல்கள் Stanley Road பகுதியில் உள்ள 44, at Low Cost Food and Wine in Bootle உணவகத்தில் மனைவி வேலை செய்து கொண்டிருந்த போது அப்பகுதியில் மனைவிக்கு முகத்தை மறைக்கத்தக்கதான மாஸ்க் அணிந்து கடைக்குள் பதுங்கியிருந்த நிமலராஜா அந்த உணவகத்தில் ஒருவரும் இல்லாத நேரம் சென்று மனைவியை துரத்தி துரத்தி 18 முறை நெஞ்சிலும் தலையிலும் கத்தியால் குத்தியுள்ளார்.
♦ கத்தியால் மனைவியைக் குத்திய பின் நிமலராஜா மனைவியின் மேலடையை துாக்கி தனது கத்திக் குத்து நெஞ்சில் ஆழமாக பதிந்துள்ளதாக என பார்த்துள்ளார். ஆழமாக கத்தி குத்திள்ளது என்பதை அறிந்த பின் வெளியே வந்த நிமலராஜா தானும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் ஒருவகை திரவத்தை அருந்தியுள்ளார்.
♦ அதன் பின்னர் மயக்கமாகி வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் தொடர்ச்சியாக 20 நாட்கள் மயக்கமான நிலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
♦ மனைவியை திட்டமிட்டு கொன்றதற்கான தண்டனையை வழங்க வேண்டும்… என அரச தரப்பு சட்டத்தரணி Liverpool Crown நீதிமன்றில் கூறியுள்ளார்.
♦ இதன் பின்னர் நிமலராஜா தரப்ப கூறும்போது ” தனது பிள்ளைகளை 18 மாதங்களாக பார்க்க விடாத காரணத்தாலும் 2 வது மகளின் பூப்புனித நீராட்டுவிழாவுக்கு தன்னை அழைக்காத காரணத்தாலும் ஏற்பட்ட விரக்தியால் மதுபோதையில் குறித்த தாக்குதலை மேற்கொண்டேன்” என தெரிவித்திருந்தார்.
♦ எனக்கும் மனைவிக்கும் தான் பிரசனை ஆனால் நான் மூன்று பிள்ளைகளின் தந்தை .. என் பிள்ளைகளை நான் நன்றாகவே வளர்த்தேன். என் பிள்றைகள் பெண் பிள்ளைகள் என்பதால் தாயாருடன் இருக்க நான் அனுமதித்தேன் ஆனால் அவர் என் பிள்ளைகளை என்னை பார்க்கவிடாமல் இறுதி ஒன்றரை ஆண்டாக தடுத்துவிட்டார். இந்த நேரம் என் பெண்ணின் சடங்கை கூட எனக்கு சொல்லாமல் அழைக்காமல் வேறு ஆட்களுடன் அவர் நடத்தியது என்னை கடுமையாக மன ரீதியாக பாதித்தது இதனால் தான் மது அருந்திவிட்டு இந்த செயலை செய்தேன் என கூறினார் .
♦ வழக்கை தீர வி்சாரித்த Liverpool Crown நீதிமன்ற நீதிபதி Brian Cummings KC அவர்கள் ”நிமலராஜா மிகவும் கொடூரமான ஒரு திட்டமிட்ட கொலையைச் செய்துள்ளார் என்பதால் 29 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக அறிவித்தார்.






















