அமெரிக்கர்களின் செல்வத்தைச் சுரண்டுவதைத் தடுக்கும் நோக்கில், ஜனாதிபதி டிரம்ப் கடந்த வாரம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்படி, பாகிஸ்தான், பங்களாதேஷ் , ஈரான், ரஷ்யா உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த அதிரடி நடைமுறை எதிர்வரும் ஜனவரி 21-ம் திகதி முதல் அமுலுக்கு வருவதுடன்,
இந்த அறிவிப்பு விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு பிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் நடைபெற உள்ல நிலையில், தடைப் பட்டியலில் உள்ள நாடுகளில் 15 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.|
அத்துடன் பிரேசில், மொராக்கோ, கொலம்பியா, ஈரான், உருகுவே போன்ற நாடுகளின் வீரர்களும் ரசிகர்களும் அமெரிக்காவிற்குள் நுழைய முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்தக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தத் தடை என்பது அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்கவும், பணிபுரியவும் விரும்புபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள், விளையாட்டு வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் பயன்படுத்தும் குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கு (Non-immigrant visas) எந்தத் தடையும் இல்லை. எனவே, உலகக்கோப்பை கால்பந்து ரசிகர்கள் கவலையின்றி போட்டிகளைக் காணத் திட்டமிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பட்டியலில் இல்லாத நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருக்கும் இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கும் இந்தத் தடையால் பாதிப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


