TamilsGuide

ஜனாதிபதி அவர்களினால் திரைசேரியின் கதவு திறக்கப்பட்டது மக்களின் நலனுக்காக – அமைச்சர் சமந்த வித்தியாரத்ன

திரைசேரியின் கதவு திறக்கப்பட்டது மக்களின் நலனுக்காக ஆனால் கடந்தகாலத்தில் திறைசேரியின் கதவினை திறந்து முன்னாள் இருந்தவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர் ஆனால் இம்முறை திறைசேரியின் கதவு திறக்கபட்டு திட்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரனங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

நேற்றையதினம் வளப்பனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்க கதவு திறக்கப்பட்டது , விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டது எமது மக்களுக்கு வழங்க கூடிய அனைத்து நிவாரணங்களையும் நாம் வழங்கியுள்ளோம் .

இதனை வழங்குவதற்கு முன்னின்று உழைத்த அரச உத்தியோகத்தர்களை நாங்கள் கெளரவ படுத்துகிறோம்.

பதுளை மாவட்டத்தில் இருந்து நுவரெலியா மாவட்டத்திற்கு 1003அரச உத்தியோகத்தர்கள் இங்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நாட்டில் அதி கூடிய சக்தி மக்களின் மனிதாபிமானம் சக்தி இருக்கிறது அதனை வெளிகாட்ட தைரியம் இல்லை அதற்குதான் ஒரு முறையான தலமைதுவத்தை நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்

நாட்டில் ஏற்பட்ட திட்வா சூறாவளியின் பின்னர் பாரிய சக்திகளை நாம் வெளியில் கொண்டுவந்துள்ளோம் .

இதன் பிறகு பாடசாலை இயங்கும் பாதைகள் புணரமைக்கப்படும் மக்களின் வாழ்க்கையில் ஒழிமயம் தெரியும் இந்த அனர்த்ததின் ஊடாக பாரிய பாதிப்புகள் ஏற்பட்டது அவை அனைத்தையும் நாம் ஒரு புறமாக வைக்கவேண்டும் .

இந்த அனர்த்தத்தை ஆசிர்வாதமாக எடுத்து கொள்ள வேண்டும் ஜனாதிபதி அவர்கள் ரீபில்டிங் சிறீலங்கா என பெயர் வைத்தது வெறுமனே அல்ல நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் 1945ஆண்டு இரண்டாவது உலக போர் இடம் பெற்ற வேளையில் அமெரிக்கா வந்து பயங்கரமான குண்டு தாக்குதல்களை மேற்கொண்டனர் அந்த தாக்குதலை கிரோசிமா நகரில் மேற்கொண்டனர் அதில் ஒரு இலட்ச்சத்து 29ஆயிரம் பேர் உயிர்ழந்தனர் இரண்டாவது தாக்குதலில் ஒரு இலட்சத்து 26ஆயிரம் பேர் உயிர்ழந்தனர் ஜப்பான் ஒரு மயான பூமியாக மாரியது.

1970ம் ஆண்டு பாரிய சக்தியின் ஊடாக ஜப்பான் அபிவிருத்தி அடைந்தது அதேபோல் எமது நாடும் எதிர்வரும் காலங்களில் சிறந்த அபிவிருத்தியை நோக்கி சென்றடையும் என குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment