• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திக்க சென்ற அதுரலியே ரத்தன தேரர்

இலங்கை

திருகோணமலை கடற்கரையோர புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திப்பதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் வருகைதந்திருந்தார்.

சந்திப்பின் பின்ன்ராக இடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில், குறித்த பெளத்த மதகுருக்களின் கைதானது ஒரு திட்டமிட்ட செயலாக பார்க்க வேண்டும் என இதன்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது, நான் இந்த அரசாங்கத்திற்கு சொல்ல விரும்புவது இவ்வாராண செயற்பாடுகள் மூலமாக இந்த அரசாங்கமானது மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது எனவும்; இதன்மூலமாக வீணாக அமைதியாக இருக்கும் நாட்டில் இனவாதம் மத வாதத்தினை ஏற்படுத்தி மீண்டும் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தவே இந்த அரசாங்கம் முனைவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
 

Leave a Reply