TamilsGuide

மனைப்பொருளியல் பாடத்திற்குரிய செய்முறைப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான (2025) மனைப்பொருளியல் (Home Economics)பாடத்திற்குரிய செய்முறைப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவித்தலுக்கமைய, உரிய செய்முறைப் பரீட்சையானது வரும் 2026 ஜனவரி 24 ஆம் திகதி முதல் பெப்ரவரி 02 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அமைக்கப்படவுள்ள 42 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறே, அனுமதி அட்டைகள் தபால் மூலம் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகளுக்கு, 2026 ஜனவரி 19 ஆம் திகதி முதல் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பரீட்சை தொடர்பான மேலதிக தகவல்களுக்காக, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பாடல் ஊடகங்கள் ஊடாக வினவ முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அவசர அழைப்பு இலக்கம்: 1911

தொலைபேசி இலக்கங்கள்: 011 2784208 / 011 2784537

தொலைநகல் இலக்கம்: 011 2784422

மின்னஞ்சல்: gcealexam@gmail.com
 

Leave a comment

Comment