சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவின் மைக் பிங்கி, ஜெனா கார்ட்மேன், ஜப்பானை சேர்ந்த கிமியா யூயி, மற்றும் ரஷியாவின் ஒலெக் பிளாட்னாவ் ஆகிய 4 பேர் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டு வந்தனர். அவர்கள் 6 மாதங்கள் தங்கி, ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென்று ஒருவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து 4 பேரையும் அவசரமாக பூமிக்கு திரும்ப அழைக்க நாசா முடிவு செய்தது. அதன்படி அவர்கள் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினர். 4 பேரும் பயணித்த விண்கலம் சான்டியாகோ அருகே பசிபிக்கடலில் பத்திரமாக இறங்கியது.
பின்னர் அதிலிருந்து விண்வெளி வீரர்கள் வெளியே அழைத்து வரப்பட்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்தின் 26 ஆண்டுகால வரலாற்றில், மருத்துவ அவசரம் என்று விண்வெளி வீரர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது இதுவே முதல் முறையாகும்.


