TamilsGuide

பாக்யராஜ் படத்தை ரிஜக்ட் செய்த எம்.ஜி.ஆர் - அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்!

படம் பெரிய ஹிட்டு தான், ஆன விருது இல்ல; பாக்யராஜ் படத்தை ரிஜக்ட் செய்த எம்.ஜி.ஆர்: அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்!

திரையுலகில் இருந்தாலும் அரசியலில் எம்.ஜி.ஆரின் இரட்டை இலை சின்னத்திற்காக பிரச்சாரம் செய்து அரசியலிலும் ஈடுபட்டிருந்த பாக்யராஜ், எம்.ஜி.ஆர் தனது திரையுலக வாரிசு என்று அறிவிக்கும் அளவுக்கு அவரது மனதை கவர்ந்தவர்.

நடிகரும் இயக்குனரருமான பாக்யராஜ் மறைந்த முதல்வர் எம்.ஜி.ருடன் நெருங்கிய பணைப்பில் இருந்திருந்தாலும், அவரது படத்திற்கு விருது கொடுக்க வேண்டாம் என்று எம்.ஜி.ஆர் மறுத்துள்ளார். அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் பாக்யராஜ். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், அதன்பிறகு சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, மௌன கீதங்கள் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஒரு கைதியின் டைரி திரைப்படத்திற்கு கதை எழுதிய பாக்யராஜ், அதே படத்தை இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் இயக்கி வெற்றி கண்டிருந்தார். திரையுலகில் இருந்தாலும் அரசியலில் எம்.ஜி.ஆரின் இரட்டை இலை சின்னத்திற்காக பிரச்சாரம் செய்து அரசியலிலும் ஈடுபட்டிருந்த பாக்யராஜ், எம்.ஜி.ஆர் தனது திரையுலக வாரிசு என்று அறிவிக்கும் அளவுக்கு அவரது மனதை கவர்ந்தவர். பாக்யராஜூவுக்கு திருமணம் செய்து வைத்தவர் எம்.ஜி.ஆர் தான்.

இவ்வளவு நெருக்கம் இருந்தாலும், பாக்யராஜ் படத்திற்கு விருது கொடுக்க கூடாது என்று வேண்டுமென்றே ரிஜக்ட் செய்துள்ளார் எம்.ஜி.ஆர். இது குறித்து பாக்யராஜ் 50 நிகழ்ச்சியில் அவரே கூறியுள்ளார். 1981-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி ஹீரோவாக நடித்த படம் தான் அந்த 7 நாட்கள். பாக்யராஜ் அம்பிகா, ராஜேஷ், கல்லுப்பட்டி சிங்காரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக மாறியது. வசூலிலும் சாதனை படைத்தது என்று சொல்லலாம்.

அந்த வருடத்தின் மிக்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக இருக்கும் இந்த படத்திற்கு விருது கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் படங்களின் பட்டியலில் முதல் பெயராக அந்த 7 நாட்கள் படத்தின் பெயரை கொடுத்துள்ளனர். ஆனால், எம்.ஜி.ஆர் அந்த பெயரை அடித்துவிட்டு மற்ற படங்களுக்கு விருது கொடுத்துள்ளார். விருது எதிர்பார்த்த பாக்யராஜூவுக்கு ஏமாற்றம் ஏற்பட்ட நிலையில், அன்று மாலையே எம்.ஜி.ஆர் தனது வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். அதன்படி அவரது வீட்டுக்கு சென்ற பாக்யராஜூவுக்கு ஏன் விருது இல்லை என்பது குறித்து தெளிவாக விளக்கியுள்ளார் எம்.ஜி.ஆர்.

விருது பட்டியலில் உன் படம் தான் முதலில் இருந்தது. நான் தான் அதை அடித்துவிட்டேன். நீ சிறப்பாக ஒரு படம் எடுத்திருக்கிறாய். மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. ஆனால் இந்த படத்திற்கு நான் விருது கொடுத்தால், நான் யார், நீ இந்த படத்தில் என்ன கேரக்டர் பண்ணிருக்கே என்று முடிச்சு போட்டு பேசுவார்கள்.. கருணாநிதி கூட இதை படமாகத்தான் பார்ப்பார். ஆனால், அடிமட்ட தொண்டர்கள் அப்படி பார்க்கமாட்டார்கள். நீ ஒரு படம் எடுத்திருக்க, மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளது அது போதும் என்று கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர் பூர்வீகம் கேரளா, அந்த 7 நாட்கள் படத்தில் பாக்யராஜ் பாலக்காட்டு மாதவன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். விருது கொடுத்தால் தனது ஊர் கேரக்டர் என்பதால் எம்.ஜி.ஆர் விருது கொடுத்ததாக பேசுவார்கள் என்பதால் எம்.ஜி.ஆர் அந்த படத்தை விருது பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார்.

Parthasarathy CK

Leave a comment

Comment