TamilsGuide

வாத்தியார் சும்மா ஸ்டைலிஷா பைலட் (கேப்டன்) உடையில்

நண்பர் ஒருவர் அவர் சிவாஜி ரசிகர்.. ஆனால் எம்ஜிஆரையும் பிடிக்கும் . நான் நிறைய மக்கள் திலகத்தின் படங்களை போடுவதை பார்த்து என்னை tease செய்வதாக நினைத்துக் கொண்டு "எங்க சிவாஜி "பைலட் பிரேம்நாத்" என்ற படத்தில் பைலட் ஆக நடித்திருக்கிறார். என்ன லுக் தெரியுமா! உங்க எம்ஜிஆரால் அப்படி நடிக்க முடியுமா ?"என்று என்னைக் கேட்டார்..

"அப்படிங்களா சாமி, போயிட்டு வாங்க, அவர் பைலட்டா நடிச்சா எப்படி இருப்பார்னு உனக்கு பார்க்கணுமா..நாளைக்கு சாயங்காலம் எட்டு மணிக்கு மேல FB-லே வந்து பாரு காட்டுறேன் " அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டேன் . உடனே தோழியை கூப்பிட்டேன். "இதோ பாரு சவால் விட்டு வந்துட்டேன். என்ன தோத்துப் போக வச்சிடாதே.!" என்று நான் சொல்லி முடிப்பதற்குள் "என்ன கண்ணா உன்னை தோக்க விட்டிடுவேனா.. அது நான் தோத்து போறதுக்கு சமம் ஆச்சே. நீ போய் நிம்மதியா தூங்கு டார்லிங் Sweet dreams" அப்படின்னு சொல்லிட்டு ஃபோனை வச்சுடுச்சு .

இப்ப பார்த்த படம் வந்திருக்கு.

வாத்தியார் சும்மா ஸ்டைலிஷா பைலட் (கேப்டன்) உடையிலே ஏர்போர்ட்டுக்குள்ள நடந்து வந்துகிட்டு இருக்காரு.

எனக்கு பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கும் என்று போட்டுவிட்டேன். நம்ம சிவாஜி sir நண்பர் என்ன சொல்றான்னு பார்க்கிறேன்.

நாளை மக்கள் திலகத்தின் பிறந்தநாள். இன்னும் பல #special படங்கள் என்னிடம் இருந்து வரும். வரவேற்பு தாருங்கள்.

- ஜெய் மக்கள் திலகத்தின் நினைவில் 
நன்றி ஜெய்...
 

Leave a comment

Comment