எம்ஜிஆர் காலில் மற்றவர்கள் விழுந்து பார்த்திருப்பீர்கள். எம்ஜிஆர் இன்னொருவர் காலில் விழுகிறார் என்றால் ...
அவர் ஹிந்தி பட நடிகர், இயக்குனர் வி. சாந்தாராம். சமூக நல் கருத்துக்களை சினிமாவில் புகுத்துவதில் எம்ஜியாருக்கு வழிகாட்டி.
1957-ல் இவரது ‘தோ ஆங்க்கே பாரஹ் ஹாத்’ திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘வெள்ளிக் கரடி’ விருது பெற்றது. எம்.ஜி.ஆர். இந்த படத்தை தமிழில் ‘பல்லாண்டு வாழ்க’ என்ற பெயரிலும் இவரது ‘அப்னா தேஷ்’ படத்தை ‘நம் நாடு’ என்ற பெயரிலும் எடுத்தார்.
1959-ல் இவர் தயாரித்த ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ திரைப்படம், இந்தியாவின் முதல் கலர் படம் அவருக்கு பாராட்டுகளை அள்ளிக் குவித்தது.
சமூக முற்போக்குச் சிந்தனைகளை கலை வடிவத்துக்கேற்ப மாற்றி எவ்வாறு திரைப்படமாக்குவது என்பதை இந்திய இயக்குநர்களுக்குக் கற்றுக்கொடுத்த மாமேதை சாந்தாராம்.


