மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிப்பதற்காக நடிகர் சூரி அரங்கத்துக்கு வந்தார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிற்பத்தை நினைவுப்பரிசாக சூரி வழங்கினார்.
இதன் பின்னர் நடிகர் சூரி நிருபர்களிடம் கூறுகையில், 'ஜல்லிக்கட்டு கலாச்சாரம் இடையில் குறையக்கூடிய சூழல் வந்தது. மீண்டும் எழுச்சி பெற்று தற்போது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு சென்ற வருடத்தைவிட இந்த வருடம் இன்னும் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது' என்றார்.


