TamilsGuide

இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள இராட்சத முதலை

இறந்த நிலையில் இராட்சத முதலையொன்று காத்தான்குடி பாதையில் கரையொதுங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதை வாவியில் 15 நாட்களுக்குள் இறந்து கரையொதுங்கிய இரண்டாவது முதலை இதுவாகும்

கடந்த மாதம் இறுதி பகுதியில் இராட்சத முதலையொன்று இதே வாவியில் பிறந்து கரையொதுங்கியது

நேற்றிரவு இரண்டாவது முதலை இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது

குறித்த வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் அடிக்கடி வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியிருந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முதலை இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது

கரை ஒதுங்கிய முதலையை பார்வையிட அதிகளவிலான மக்கள் கூடி வருவதையும் அவதானிக்க முடிகின்றது

இறந்த இந்த முதலை 12 அடியைக்கொண்டதென தெரிவிக்கப்படுகிறது
 

Leave a comment

Comment