நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தீர்களே, இரண்டுக்குமிடையே நீங்கள் கண்ட வேற்றுமை என்ன?
சினிமா
''நிறைய இருக்கிறது. ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன். நான் நாடகங்களில், அதுவும் முக்கியமாக 'என் தங்கை’ நாடகத்தில் நன்றாக அழுவேன். வேண்டும்போது உணர்ச்சிவசப்பட்டு துயரத்தை வரவழைத்துக் கொள்வேன். அது ரொம்பவும் இயற்கையாக இருக்கும். சினிமாவிலும் அம்மாதிரியே இயற்கையாக அழவேண்டும் என்ற ஆசை எனக்கு! ஆகவே 'கிளிசரின்’ போட்டுக் கொள்ள மாட்டேன் என்று முதலில் பிடிவாதமாக இருந்தேன். அதேபோல் படப்பிடிப்பின்போது இயற்கையாகவே அழுதேன். அந்தக் காட்சியைத் திரையில் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே தெரியவில்லை. ஏனெனில், இயற்கையாக அழுததால், அந்த விளக்குச் சூட்டில் கண்ணீர் கன்னத்துக்கு வரும் முன்பே உலர்ந்துபோய்விட்டது! பிறகுதான் சினிமா வேறு, நாடகம் வேறு என்று புரிந்து கொண்டேன். நானும் பிறரைப்போல் 'கிளிசரின்’ போட்டுக்கொள்ள ஆரம்பித்தேன்.''
- விகடன் பொக்கிஷம்






















