TamilsGuide

களுவாஞ்சிக்குடி நகரில் களைகட்டிய தைப்பொங்கல் வியாபாரம்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்

வர்த்தக நிலையங்களிலும், ஏனைய வியாபார ஸ்தலங்களிலும் வியாபாரம் களைகட்டிய நிலையில் மக்கள் புத்தாடைகளையும், ஏனைய வீட்டு பாவனை பொருட்களையும், மண்பானை, மண்சட்டி போன்ற பொங்கலுக்கான பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தெகுதியில் படுவான் கரைப் பிரதேசத்தையுமும், எழுவான் கரையையும் இணைக்கும் பிரதான நகரமாக களுவாஞ்சிக்குடி நகர் பிரதான வர்த்தக நிலையமாக விளங்குகிறமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment