மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
இலங்கை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று நண்பகல் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக நீக்கி பக்கச்சார்பற்ற விசாரணையினை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் டாக்டர் தி.தேவநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் கலந்துகொண்டனர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக நீக்கி பக்கச்சார்பற்ற விசாரணையினை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று பிற்பகல் தொடக்கம் வைத்தியர்கள் பணி பகிஸ்கரிப்பினை முன்னெடுத்துவருகின்றனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் நோயாளர் பிரிவுகள் இயங்கும் நிலையில் ஏனைய பிரிவுகளில் வைத்தியர்கள் பணி பகிஸ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர்.
இன்றைய தினம் பகல் 12.30மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய வைத்தியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.






















