திரும்ப் பெறப்பட்ட விமலுக்கு எதிரான பிடியாணை உத்தரவு
இலங்கை
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தனது சட்ட ஆலோசகர் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவினை திரும்பப் பெற கொழும்பு மேல் நீதிமன்றம் (14) இன்று உத்தரவிட்டது.
75 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாகக் கூறி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தாக்கல் செய்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவற்கான பிடியாணையைப் பிறப்பித்தார்.
பின்னர், விமல் வீரவன்ச தனது சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அதைத் தொடர்ந்து பிடியாணை உத்தரவினை திரும்பப் பெற நீதிபதி உத்தரவிட்டார்.






















