• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தனுஷ் - மமிதா பைஜூ நடிக்கும் D54 படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிப்பு

சினிமா

நடிகர் தனுஷ்- விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவாகி உள்ள படம் 'D54'. 'போர் தொழில்' பட இயக்குநரான விக்னேஷ் ராஜா இயக்கி உள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்து உள்ளார். மேலும் இப்படத்தில் கருணாஸ், கே.எஸ். ரவிக்குமார், பிருத்வி பாண்டியராஜன், குஷ்மிதா மற்றும் நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'D54' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தத்த்து. இந்நிலையில், 'D54' படத்தின் முக்கிய அப்டேட் பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை காலை 10.50 மணிக்கு வெளியாகும் என்று பட தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 
 

Leave a Reply