TamilsGuide

கனடாவில் நாடு தழுவிய அடிப்படையில் வாபஸ் பெறப்படும் உணவுப் பொருள்

கனடாவில் நாடு தழுவிய ரீதியில் சந்தைகளிலிருந்து மாட்டிறைச்சி பர்கர்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய உணவு ஆய்வு நிறுவனம் ஈகொலி பாக்டீரியா தொற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் காரணமாக ‘no name’ (நோ நேம்) பிராண்டு மாட்டிறைச்சி பர்கர்களை நாடு முழுவதும் உடனடியாக மீளப் பெறுமாறு உத்தரவிட்டுள்ளது. திங்கட்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டுள்ள இந்தப் பொருளை பொதுமக்கள் சாப்பிடவும், பயன்படுத்தவும், விற்கவும், பரிமாறவும் அல்லது விநியோகிக்கவும் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும், அதன் அடிப்படையில் பிற பொருட்களுக்கும் மீட்பு அறிவிப்பு வெளியிடப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, இந்தப் பொருளை உட்கொண்டதால் நோய் ஏற்பட்டதாக எந்த தகவலும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாக்டீரியா தொற்றிய உணவுகள் பார்ப்பதற்கு அல்லது மணத்திற்குப் பழுதடைந்ததாக தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் அவற்றை உண்டால் கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment