ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரான்சில் விவசாயிகள் 350 டிராக்டர்களுடன் நாடாளுமன்றை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரான்ஸ், ஐரோப்பிய யூனியனின் மிகப்பெரிய விவசாய உற்பத்தி நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உரம், எரிபொருள் செலவு உயர்வு, காலநிலை போன்ற காரணங்களால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் அரசு, 'மெர்கோசூர்' என்ற தென் அமெரிக்க நாடுகளின் பெரிய வர்த்தகக் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் போட உள்ளது.
இதனால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி, பிரான்ஸ் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்று பிரான்ஸ் விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள், 350 டிராக்டர்களுடன் அணிவகுத்துச் சென்று, தலைநகர் பாரிசில் நாடாளுமன்றை முற்றுகையிட்டனர். இதனால், பாரிஸ் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


