மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள் மற்றும் வெதுப்பக உறுப்பினர்கள் சங்கத்தினருடனான விசேட கலந்துரையாடல் கூட்டம் இன்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட சிகை அலங்கார நிலையங்களில் பாடசாலை மாணவர்களுக்குரிய சிகை அலங்காரம் செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
மேலும் வெதுப்பக பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரிடம் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதுடன், வெதுப்பக முச்சக்கர வண்டி சாரதிகள் பாடசாலை மாணவர்களுடன் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொள்வதாகவும், அவ்வாறு செயற்படு பவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து பேக்கரிகளிலும், விலைத்தளம்பல் பிரச்சினை காணப்படுவதன் காரணமாக பாண் ஒன்றிற்கான நிர்ணய விலையாக 140 ரூபாய் அறவிட வேண்டும் எனவும் அறிவித்தல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


