TamilsGuide

இலஞ்சம் கோரிய அதிகாரி மதுபோதையுடன் கைது

இலஞ்சமாக 30,000 ரூபா மற்றும் விசேட மதுபான போத்தலை கோரிய குற்றச்சாட்டில் மதுபோதையில் இருந்த ஒரு வன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹுலானுகே பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.

வன இலாகா பிரதேசத்தில் சட்டவிரோதமாக விவசாயம் செய்த குற்றச்சாற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதற்காகவே குறித்த அதிகாரி இலஞ்சம் கோரியுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்பத்தப்படவுள்ளார்.
 

Leave a comment

Comment