• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரொரன்றோவில் புலம்பெயர்தலுக்கு எதிராக நடந்த பேரணியில் கலவரம்

கனடா

கனடாவின் ரொரன்றோவில் புலம்பெயர்தலுக்கு எதிராக சிலர் பேரணி நடத்த, அவர்களுக்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட, பேரணி கலவரத்தில் முடிந்துள்ளது. 

சனிக்கிழமை மதியம் ரொரன்றோவிலுள்ள Nathan Phillips சதுக்கத்தில் சிலர் கூடி புலம்பெயர்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு எதிராக மற்றொரு கூட்டம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் இரு தரப்பும் மோதிக்கொள்ள, தடுக்கச் சென்ற பொலிசாருக்கும் அடி விழுந்துள்ளது.

தாங்கள் தாக்கப்பட்டதாகவும், தங்கள் மீது, முட்டைகள், டாய்லெட் பேப்பர் மற்றும் சிறுநீர்ப்பைகள் வீசப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வன்முறையைத் தொடர்ந்து 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 29 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply