TamilsGuide

கனடாவில் மான் வேட்டையில் ஈடுபட்ட மூவருக்கு அபராதம்

கனடாவில் சட்டவிரோதமான முறையில் மான் வேட்டையில் ஈடுபட்ட மூன்று பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், லேக்ஹர்ஸ்ட் பகுதியைச் சேர்ந்த மூன்று பேருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2024 டிசம்பரில் இடம்பெற்ற மான் வேட்டையின் போது மேற்கொள்ளப்பட்ட அனுமதியற்ற நுழைவு மற்றும் உரிமம் தொடர்பான பல்வேறு சட்ட மீறல்களுக்காக மொத்தம் 4,500 கனேடிய டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகள் கடந்த ஆண்டு மே 8 மற்றும் செப்டம்பர் 11 ஆகிய திகதிகளில் ஒன்டாரியோ நீதிமன்றத்தில் நடைபெற்றன.

பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணை தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேக நபர்களை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்குடன் ஸாகரி பெல் என்பவருக்கு 1,500 டாலர் அபராதமும், ஐந்து ஆண்டுகள் ஒன்டாரியோவில் வேட்டையாட தடைவும் விதிக்கப்பட்டது.

ஸ்டுவார்ட் என்பவருக்கு வேட்டைக்காக அனுமதியின்றி நுழைதல் மற்றும் பிறர் தனது உரிமத்தை சட்டவிரோதமாக பயன்படுத்த உதவிய குற்றங்களுக்கு 2,700 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

கட்ரினா பெல் என்பவருக்கு 300 டாலர் அபராதம் மற்றும் ஒரு ஆண்டு வேட்டையாடத் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்குகள் பீட்டர்பரோவில் உள்ள ஒன்டாரியோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. 
 

Leave a comment

Comment