TamilsGuide

வெனிசுவேலாவில் இருந்து வெளியேறுங்கள் - அமெரிக்க பிரஜைகளுக்கு உத்தரவு

வெனிசுவேலாவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான சேவையை பயன்படுத்தி, அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி அமெரிக்கா தனது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்புஇல் வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெனிசுவேலாவில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து சீரற்று உள்ளது. வெனிசுவேலாவில் ஆயுதமேந்திய கிளர்ச்சி குழுவினர் வீதிகளில் சுற்றி திரிகின்றனர். அவர்கள் தடுப்புகளை ஏற்படுத்தி அமெரிக்க குடிமக்கள் யாரேனும் உள்ளனரா? என தேடி வருகின்றனர்.

அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக விலகி இருக்கவும். வெனிசுவேலாவில் சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனால் இதனை பயன்படுத்தி, வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது.

வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்கர்கள் பயணிக்கும்போது கவனத்துடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

தொடர்ந்து அந்த செய்தியில், வெனிசுவேலாவில் அமெரிக்கர்களை சிறை பிடித்தல், சிறை பிடித்து வைத்து சித்திரவதை செய்தல், பயங்கரவாதம், கடத்தல், உள்ளூர் சட்டங்களை தன்னிச்சையாக அமல்படுத்துதல், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் மோசமான சுகாதார உள்கட்டமைப்பு உள்பட அமெரிக்கர்களுக்கு கடுமையான ஆபத்துகள் உள்ளன.

அதனால், வெனிசுவேலாவுக்கு பயணிக்க வேண்டாம் என்று உச்சபட்ச அளவிலான எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது. எனினும், வெனிசுலா வெளியுறவு மந்திரி யுவான் கில், வெனிசுலா முழு அளவில் அமைதியாகவும் மற்றும் ஸ்திரத்தன்மையுடனும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment