TamilsGuide

மீண்டும் செயல்பாடுகளை ஆரம்பித்த நுரைச்சோலை மின் பிறப்பாக்கி

பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாகி (ஜெனரேட்டர்) மீண்டும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது.

இருப்பினும், அந்த மின் பிறப்பாக்கியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இன்னும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவில்லை.

மேலும் அடுத்த சில நாட்களில் அது தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள 03 மின் பிறப்பாக்கிகள் மூலம் 900 மெகாவாட் மின்சாரம் தேசிய மின்சார கட்டமைப்புக்கு சேர்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் தற்போது ஒரு மின் உற்பத்தி நிலையம் மட்டுமே தேசிய மின்சார கட்டமைப்புக்கு மின்சாரத்தை பங்களிக்கிறது.

எனினும், மற்றொரு மின் பிறப்பாக்கி இன்னும் செயல்படாமல் இருப்பதாகவும், அந்த மின் பிறப்பாக்கியை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 

Leave a comment

Comment